குழந்தைகளுக்கான ‘தீம்’ உணவகத்தைத் திறந்துள்ள ‘ஜுனியர் குப்பண்ணா’

06 Dec 2022

சென்னை டி.டி.கே சாலையில் அமைந்துள்ள "ஜூனியர் குப்பண்ணா" உணவகம் குழந்தைகளுக்குத் தேவையான பல அம்சங்கள் கூடிய உணவகத்தைத் திறந்துள்ளது. 

சர்க்கஸ், பந்து, புத்தகங்கள் கூடிய பல விளையாட்டுப் பொருட்களுடன், குழந்தையைப் பார்த்துக் கொள்ள ஒரு "கேர் டேக்கர்" என பெற்றோர் பயமில்லாமல் நிம்மதியாய் நேரத்தை செலவழிக்க இவ்உணவகத்தை தொடங்கியுள்ளது.

மேலும், குழந்தைகள் சாப்பிடுவதற்காக பிரத்யேகமாக மெனுவையும் அறிமுகப்படுத்தியுள்ளது "ஜூனியர் குப்பண்ணா". குழந்தைகளுக்குப் பிடித்த, பாஸ்தா, சிக்கன், சைவம் மற்றும் அசைவம் என 30க்கும் மேற்பட்ட உணவு வகைகள் உள்ளது. 

உணவகம் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஈரோடு மகேஷ் குழந்தைகளுக்கு சூப்பர் கிட்ஸ் விருதுகளை வழங்கினார்.

உணவகத்தைத் திறந்து வைத்து அவர் பேசுகையில், ஜூனியர் குப்பண்ணா உணவகம் எங்க மண்ணின் பிராண்ட். அதனால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதுமட்டுமில்லாமல், குழந்தைகளுக்கென பிரத்யேக உணவகத்தை அறிமுகப்படுத்துவதில் கூடுதல் மகிழ்ச்சி. 

இது மிகவும் முக்கியமான ஒரு திட்டம். ஏனென்றால், இப்போதுள்ள குழந்தைகள் மொபைலை பார்த்துக் கொண்டு தான் உணவு சாப்பிடுகிறார்கள். குழந்தைகள் விளையாடும் சமயத்தில் தான் அவர்களை சாப்பிட வைக்க வேண்டும். அது தான் முறை. 

ஒரு அப்பாவாக நான் சொல்வது, குழந்தைகளுக்கு என்ன தேவையோ அதைச் செய்யுங்கள், அவர்களுக்கு பிடித்ததை வாங்கித் தாருங்கள். அதை விட முக்கியமாக, அவர்கள் எவ்வளவு சாப்பிடுகிறார்களோ அதே அளவு விளையாடவும் விடுங்கள், என்றார். 

அவ்விழாவில் பேசிய உரிமையாளர் பாலச்சந்திரன், நமது பாரம்பரிய உணவில் நிறைய பலன்கள் உள்ளன. அதை சிறு வயது முதலே குழந்தைகளுக்கு பழக்கப்படுத்தினால். பிற்காலத்தில் நம் உணவு முறையில் அவர்களுக்கு ஈர்ப்பு இருக்கும். ஏனென்றால், தற்போதுள்ள குழந்தைகள் பிட்ஸா மற்றும் பர்கர் போன்ற உணவுகளைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். 

இப்போதுள்ள குழந்தைகள் நமது உணவை சாப்பிட்டுப் பழக வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த "JK ஜூனியர்ஸ்". குழந்தைகளுக்கு இருக்கும் மெனுவில், காரம் கம்மியாகவும், அவர்களுக்குப் பிடித்தமான சில உணவு வகைகளையும் நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளோம்’, என்றார்.

JK ஜூனியர்ஸ் திட்டத்திற்கு பொம்மைகளை வழங்க முன்வந்த "FUNSKOOL" நிறுவனத்திற்கும், புத்தகங்களை வழங்கிய "ODDESY" நிறுவனத்திற்கும் நன்றி தெரிவித்தார். 

டி.டி.கே சாலையிலுள்ள ஜூனியர் குப்பண்ணா உணவகம் மட்டுமின்றி, சென்னையிலுள்ள 12 கிளைகளிலும் இத்திட்டத்தை ஜூனியர் குப்பண்ணா உணவகம் தொடங்கியுள்ளது.

Tags: junior kuppanna, jk juniors, non veg hotel

Share via:

Movies Released On July 27