கொரானோ கட்டுப்படுத்த ஆலோசனைக் குழு, தமிழக அரசு அறிவிப்பு

16 May 2021

தமிழ்நாட்டில் கொரானோ நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவக்ரள் கூட்டம் மே 13ம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 4ன் படி ‘நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி அனைத்து சட்டமன்றக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திமுக. அதிமுக காங்., மதிமுக. விசிக பாமக பா.ஜ., உள்ளிட்ட 13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்.எல்.ஏக்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக்குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வவப்போது கூடி ஆலோசனை வழங்கும் என கூறப்படுகிறது.

அக்குழுவின் உறுப்பினர்களாக

எழிலன், தி.மு.க.,
விஜயபாஸ்கர், அ.தி.மு.க.,
நயினார் நாகேந்திரன், பா.ஜ.ப,
ஜி.கே மணி, பா.ம.க.,
முனிரத்தினம், காங்.,
சதன் திருமலைகுமார், மதிமுக.,
பாலாஜி, வி.சி.க.,
நாகை மாலி, மா.கம்யூ.,
ராமசந்திரன், இ.கம்.யூ.,
ஜவாருல்லா, ம.ம.க.,
ஈஸ்வரன், கொ.ம.தே.க.,
வேல் முருகன் த.வா.க.,
ஜெகன் மூர்த்தி, புரட்சி பாரதம்

ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tags: tamilnadu, mk stalin, corona

Share via: