ஜீ தமிழ் - தேவிஸ்ரீபிரசாத் பங்கு பெறும் ‘ராக்ஸ்டார்’ இசை நிகழ்ச்சி

17 Mar 2021

ஜீ தமிழ் டிவியில் ‘சரிகமப’ மற்றும் ‘பேட்ட ராப்’ ஆகிய இசை நிகழ்ச்சிகளை அடுத்து ‘ராக்ஸ்டார்’ என்ற இசைப் பிரபலங்களுக்கான இசை நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது.

மார்ச் 28ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிறு இரவு 7.30 முதல் 9.30 வரை இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. 

பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், பாடகர்கள் மனோ, ஸ்ரீனிவாஸ் ஆகியோர் நடுவர்களாக இருக்கப் போகிறார்கள்.

ராகுல் நம்பியார், ரஞ்சித், பம்பா பாக்கியா, சத்தியன் மகாலிங்கம், பிரியா ஹிமேஷ், என்எஸ்கே ரம்யா, சின்னப் பொண்ணு, வினைதா, ஐஸ்வர்யா சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்கின்றனர்.  பல்வேறு சுற்றுகளுடன் இப்போட்டி நடைபெ உள்ளது. அவர்களில் யார் சிறந்தவர் என்பதை ரசிகர்களும் வாக்களித்து தேர்ந்தெடுக்கலாம். 

இந்நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியை கிகி மற்றும் விஜய் தொகுத்து வழங்க உள்ளார்கள். 

மேலும், நல்ல இசையமைத் திறமையுள்ளவர்கள், அவர்களது திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் இந்நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளார்கள்.

இந்நிகழ்ச்சி கறித்து ஜீ தமிழ் வணிகத் தலைவர் சிஜூ பிரபாகரன் கூறுகையில்  ‘போட்டியாளர்கள் அனைவருக்ம் தொழில்முறைக் கலைஞர்கள் என்பதாலும், ஏற்கனவே ரசிகர்களைக் கொண்ட பிரபலங்கள் என்பதாலும், நிகழ்ச்சியின் நிறைவில் வெற்றியாளரோ, தோல்வியாளரோ இருக்க மாட்டார்கள்.  

இணையற்ற திறமைகளைப் பெற்றுள்ள இக்கலைஞர்களுக்கு வித்தியாசமான சுற்றுகளில் பாடுவதற்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் தமிழக மக்களின் இதயங்களைக் கவர்ந்து, இன்னும் பல புதிய உயரங்களுக்குச் செல்லும் ஒருவரைக் தேடிக் கண்டுபிடிப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். 

இசைப் போட்டி வளையத்துக்குள் களமிறங்க சிறந்தவர்களுள் சிறந்தவர்களை வரவேற்பதுடன், அவர்களுள் மிகச் சிறந்தவர்களைக் கண்டுபிடிக்கத் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி நிரூபிக்க வேண்டும்,’’ என்றார். 

தமிழ், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தேவிஸ்ரீபிரசாத் இதுவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சியிலும் நடுவராகப் பங்கேற்றதில்லை. அவரை பல தெலுங்கு டிவிக்கள் கேட்டுக் கொண்டும் அவர் அதற்கு சம்மதித்ததில்லை.

முதல் முறையாக ஜீ தமிழ் நிகழ்ச்சியில் இந்த ‘ராக்ஸ்டார்’ மூலம் பங்கேற்கிறார். நிகழ்ச்சியின் மையக்கரு பிடித்த காரணத்தால்தான் இந்நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்டதும் கலந்து கொள்ள சம்மதித்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சிக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பாடல் ஒன்றை நடிகர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுச் சிறப்பித்தார்.

Tags: devi sri prasad, zee tamil

Share via:

Movies Released On May 19