குயின், சூர்ய வம்சம் - புதிய நிகழ்ச்சிகளுடன் ஜீ தமிழ்
10 Sep 2020
தமிழ்த் தொலைக்காட்சிகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஜீ தமிழ் இந்த செப்டம்பர் மாதத்தில் மேலும் சில புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ‘குயின்’ வெப் தொடரை வரும் செப்டம்பர் 13, ஞாயிறு முதல் மாலை 6.30 முதல் இரவு 7.30 வரை ஒளிபரப்புகிறது. இத் தொடரில் அஞ்சனா ஜெயப்பிரகாஷ், அனிகா, சக்தி சேஷாத்ரி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
‘சூர்யவம்சம்’ என்ற புதிய தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இரண்டு விதமான கலாச்சாரத்தைக் குடும்பப் பின்னணியாகக் கொண்ட இரண்டு குடும்பங்களுக்கு இடையே நடக்கும் கதைதான் இத் தொடர். இதில் நிகிதா ராஜேஷ், சாதனா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இவற்றைத் தவிர ‘டாக்டர் அம்பேத்கார்’ தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. அடுத்து ‘ஜீ சூப்பர் பேமிலி’ என்ற நிகழ்ச்சியும் விரைவில் ஒளிபரப்பை ஆரம்பிக்க உள்ளது.
Tags: queen, surya vamsam, zee tamil