பிக் பாஸ் சீசன் 4 - விரைவில், விஜய் டிவியில்...
10 Sep 2020
ஸ்டார் விஜய் டிவியில் ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’.
இந்த வருடத்திற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி கொரானோ தொற்று காரணமாக சில மாதங்கள் தாமதமாக ஆரம்பமாக உள்ளது.
இந்நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை கமல்ஹாசன் நடித்த புரோமோ ஒன்றுடன் வெளியிட்டார்கள். வெளியான 48 மணி நேரத்தில் அது 4 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
ஜிப்ரான் இசையமைப்பில் ‘சொன்னபடி கேளு’ என்ற பாடலுடன் சாண்டி நடன அமைப்பில் வெளியான அந்த வீடியோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது.
முதல் சீசனில் ‘ஓடவும் முடியாது, ஒளியவும்முடியாது', இரண்டாவது சீசனில் 'நல்லவர் யார் கெட்டவர் யார்', மூன்றாவது சீசனில் 'இது வெறும் ஷோ அல்ல நம்ம லைப்' என பன்ச் வசனங்களுடன் வந்த புரோமோ இந்த நான்காவது சீசனில், ‘தப்புனா தட்டிக் கேட்பேன், நல்லதா தட்டிக் கொடுப்பேன்', என்ற பன்ச் வசனத்துடன் இடம் பெற்றுள்ளது.
பிக் பாஸ் சீசன் 4, அக்டோபர் முதல் வாரத்தில் ஒளிபரப்பை ஆரம்பிக்க உள்ளது.
Tags: bigg boss 4, bigg boss, kamalhaasan, vijay tv