கோவிட் 19 - ஜீ தமிழ் வழங்கிய ஆம்புலன்ஸ், இதர மருத்துவ உதவிகள்
02 Sep 2020
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும்வகையில், ZEE என்டெர்டைன்மென்ட் நிறுவனம் தமிழ்நாட்டிற்கு 45 ஆம்புலன்ஸ்களும், 12,500 PPE கிட்டுகளும் மற்றும் 80,000 தினசரி உணவுகளையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.
இதனுடன் இந்நிறுவனம் சென்னை போலீஸ் படையினருக்கு தலா 5,000 பேஸ் ஷீல்டுகள், சர்ஜிக்கல் மாஸ்குகள் மற்றும் சானிட்டைசர்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.
தமிழக முதலமைச்சர், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முதல் தொகுப்பாக 18 ஆம்புலன்சுகள் வழங்கபட்டது. மேலும் 12,000 பிபிஇகிட்டுகள், 5,000 பேஸ்ஷீல்டுகள், சர்ஜிக்கல் மாஸ்குகள்மற்றும் சானிட்டைசர்களும் நன்கொடையாகவழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது ஜீ தமிழ் டிவியின் வியாபாரத் தலைவர் சிஜு பிரபாகரன் உடனிருந்தார்.
இது குறித்து முதல்வர் அவருடைய டுவிட்டர் தளத்திலும் பகிர்ந்துள்ளார்.
“உயிர்காக்கும் 108 அவசரகால ஊர்தி சேவைக்காக மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 90 அவசரகால ஊர்திகள், அரசு இரத்த வங்கிகள் சேவைக்காக 10 இரத்ததான ஊர்திகள், கோவிட் 19 கட்டுப்படுத்தும் பணிகளுக்காக ZEE நிறுவனம் வழங்கிய 18 அவசரகால ஊர்திகள் என 118 ஊர்திகளின் சேவையை இன்று துவக்கி வைத்தேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags: zee tamil, covid 19