கலர்ஸ் டிவியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கலந்துரையாடல் நிகழ்ச்சி

02 Sep 2020

மன அழுத்தம், பதட்டம் மற்றும் நிச்சயமற்ற தன்மை நிறைந்த இந்த கொரானோ காலங்களில், தி ஆர்ட் ஆஃப் லிவிங்குடன் இணைந்து கலர்ஸ்  தமிழ் தொலைக்காட்சி , தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பார்வையாளர்களுக்கும் அமைதி, ஞானம் மற்றும் நேர்மறை கருத்துக்களை எடுத்து வர முனைந்துள்ளது.

சிந்தனையைத் தூண்டும் வகையான இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் கலர்ஸ்  தமிழ் தொலைக்காட்சியின்  வணிகத் தலைவர் அனுப் சந்திரசேகர் இருவரும் வாழ்க்கை யின் பல சிக்கல்களை எளிதாக்குவதற்கான வழிகளைப் பற்றி உரையாடுகின்றனர்.

மன ஆரோக்கியம், தனிமைப்படுத்தல், கடுமையான உறவுகள், அமைதியற்ற மற்றும் ஆர்வமுள்ள மனதைக் கையாள வழிகள் மற்றும் நுட்பங்கள் போன்ற பல விஷயங்களை பற்றி   ஆழ்ந்த அர்த்தமுள்ள நுண்ணறிவு செய்திகளை  வழங்குவதன் மூலம் ரவிசங்கர் பார்வையாளர்களின் மனங்களை கவர்ந்து உற்சாகப்படுத்துகிறார். 

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 11:00 மணிக்கு, கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்   “எளிமைப்படுத்தப்பட்ட சிந்தனைகள்” என்னும் நிகழ்ச்சியில் இணைந்திடுங்கள். அதில்   ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்  பல்வேறு துறைகளை சார்ந்த  பிரபலங்களுடன் வாழ்க்கை குறித்து  உண்மையான  உரையாடலில் ஈடுபடுகிறார்.

Tags: colors tv, sri sri ravishankar

Share via:

Movies Released On March 15