ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2020 - வெற்றியாளர்கள் விவரம்

28 Oct 2020

ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் திறமைசாலிகளை கௌரவப்படுத்தி ‘ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்’ என்ற விழாவை நடத்தி சிறப்பித்து வருகிறது.

ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2020, மூன்றாவது சீசனுக்கான விழா சமீபத்தில் நடந்தது. 

அரசு விதிகளுக்கு உட்பட்டுப் புதிய இயல்பைக் கடைப்பிடித்து, மிக முக்கியமாக மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அரங்கிற்கு உள்ளேயே விருது நிகழ்ச்சி கடுமையான கட்டுப்பாடுகளுடன் நிறைவு பெற்றது. 

அமைச்சர் டி ஜெயகுமார், கோலிவுட் நட்சத்திரங்கள் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், இயக்குனர் அமீர், பாக்கியராஜ், எம்எஸ் பாஸ்கர், ஹரிஷ் கல்யாண், பாடகர் ஸ்ரீநிவாஸ், மனோபாலா, ஆர் கே சுரேஷ், ஆர் கே செல்வமணி, சேரன், விஜய் அண்டனி, சரண்யா துராடி, பார்வதி நாயர்,  ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.  .   

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2020 மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு முதல் பகுதி அக்டோபர் 25 அன்று ஒளிபரப்பானது. இரண்டாம் பகுதி நவம்பர் 1 மதியம் 2.30 மணிக்கும், மூன்றாம் பகுதி நவம்பர் 8 மதியம் 2.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது.    

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் 2020 வெற்றியாளர்கள் : 

சிறந்த விருதுகள் பிரிவு

சிறந்த நடிகர் – ஜெய் ஆகாஷ் (நீதானே எந்தன் பொன் வசந்தம்)
சிறந்த நடிகை – நக்ஷத்ரா (யாரடி நீ மோகினி)
சிறந்த வில்லி – மௌனிகா (ரெட்டை ரோஜா & செம்பருத்தி) மற்றும் சைத்ரா ரெட்டி (யாரடி நீ மோகினி)
சிறந்த நகைச்சுவை நடிகர் – இந்திரன் (சத்யா)
அதிகப் பிரபல மருமகள் – ரேஷ்மா (பூவே பூச்சூடவா)
அதிகப் பிரபல மாமியார் – யுவஸ்ரீ (சத்யா)
அதிகமான நம்பிக்கை தரும் நடிகர் – நந்தா மாஸ்டர் (கோகுலத்தில் சீதை)
அதிகமான நம்பிக்கை தரும் நடிகை – ஆஷா கௌடா (கோகுலத்தில் சீதை)
அதிகப் பிரபல அப்பா – சாய்ராம் (நீதானே எந்தன் பொன் வசந்தம்)
அதிகப் பிரபல அம்மா – சோனியா போஸ் வெங்கட் (நீதானே எந்தன் பொன் வசந்தம்)
சிறந்த துணை நடிகர் – பரத் (யாரடி நீ மோகினி & கோகுலத்தில் சீதை)
சிறந்த நிகழ்ச்சி சிறப்பு – ஜீன்ஸ் 
சிறந்த சீரியல் – நீதானே எந்தன் பொன் வசந்தம்
திரையில் சிறந்த ஜோடி – புவியரசு & அஸ்வினி (ஓரு ஊருல ஒரு ராஜகுமாரி)

அபிமான விருது பிரிவு :

அபிமான நாயகன் – கார்த்திக் ராஜ் (செம்பருத்தி)
அபிமான நாயகி – ஷபானா ஷாஜஹான் (செம்பருத்தி)  & ஆயிஷா (சத்யா)
திரையில் சிறந்த ஜோடி – கார்த்திக் ராஜ் & ஷபானா (செம்பருத்தி)
அபிமான வில்லி – லக்ஷ்மி (செம்பருத்தி)
அபிமான தொகுப்பாளர் – பிரியா ராமன் (ஜீன்ஸ்)
அபிமானத் தொடர் – சத்யா 

ஸ்பெஷல் விருதுகள் பிரிவு

வாழ்நாள் சாதனையாளர் விருது – நளினி

வளரும் நட்சத்திரங்கள் – அஞ்சனா ஸ்ரீநிவாஸ் (என்றென்றும் புன்னகை) & ஐரா அகர்வால் (ராஜா மகள்)
இந்த வருடக் கண்டுபிடிப்பு – தர்ஷணா அசோகன் (நீதான எந்தன் பொன் வசந்தம்)
ஜீ தமிழ் இளம் திறமையாளர் – சஞ்சய் (ரெட்டை ரோஜா)
திரைப்படம் & தொலைக்காட்சிக்குப் பங்களிப்பு ஸ்பெஷல் விருது – எல் ராஜா
திரைப்படம் & தொலைக்காட்சிக்குப் பங்களிப்பு ஸ்பெஷல் விருது – சபிதா ஆனந்த்
திரைப்படம் & தொலைக்காட்சிக்குப் பங்களிப்பு ஸ்பெஷல் விருது – கவிதா
சிறந்த நிகழ்ச்சி – தமிழா தமிழா
ஜீ தமிழ் குரல் – கரு பழநியப்பன்
ஆண்டுக்கான சமூகப் பொறுப்புள்ள படம் – க / பெ ரணசிங்கம் 

தொழில்நுட்பப் பிரிவு விருது

சிறந்த  இயக்குனர் (தொடர்) – என் வி நடராஜன் -  சத்யா
சிறந்த இயக்குனர் (தொடர்) – நாராயண மூர்த்தி - ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி
சிறந்த திரைக்கதை  - எஸ் ஜே லோபர்சாமி - சத்யா
சிறந்த உரையாடல் – என். ரமணா கோபிநாத் - சத்யா

Tags: zee tamil, zee kudumba virudhugal 2020

Share via:

Movies Released On March 15