கீது மோகன்தாஸ் பிறந்தநாளில் ‘டாக்சிக்’ மேக்கிங் வீடியோ
09 Jun 2026
நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, 'டாக்ஸிக்' படக் குழுவினர் ஒரு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை பகிர்ந்துள்ளனர். இது அந்த திரைப்பட இயக்குநரின் படைப்பு சார்ந்த செயலாக்கத்தையும்... ஆளுமை மிக்க அவரது இருப்பையும்... காண்பதற்கு பார்வையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
இந்த பிறந்த நாளுக்கான சிறப்பு காணொலியில் கீது மோகன்தாஸ் - தனது இயல்பான பாணியில் செயலாற்றுவதை காட்சிப்படுத்துகிறது. காட்சிகளை தீர்மானிப்பது - பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பது - நடிப்பை வழி நடத்துவது மற்றும் ஒரு மிகப்பெரிய படக்குழுவினை நம்பிக்கையுடனும் துல்லிய தன்மையுடனும் வழிநடத்துவது- என பல விசயங்களையும் காணலாம் .
''வித்தியாசமாகத் தாக்கிய ஒவ்வொரு காட்சியின் பின்னாலும்.. வசனங்களை விட.. உரையாடலை விட அதிகமாகப் பேசிய ஒவ்வொரு மௌனத்திலும், அவர் இருந்தார்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீது மோகன்தாஸ்'' என்ற செய்தியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொலி- இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்ட மிகவும் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றான 'டாக்ஸிக்' படத்திற்கு உயிர் கொடுத்த அந்த திரைப்பட இயக்குநரையும்.. அவரது ஆளுமை மிக்க நேரடியான கள அணுகுமுறையையும் கொண்டாடுகிறது.
ஒரு சாதாரணமான படப்பிடிப்பு தள காட்சியை விட ..மேலான இந்த காணொலி- கீது மோகன் தாஸின் அசத்தலான செயல்பாட்டினை பிரதிபலிப்பதுடன்... படத்தின் பிரம்மாண்டத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்தியாவில் இவ்வளவு பெரிய மற்றும் உலகளாவிய அளவிலான ஒரு திரைப்படத்தை இயக்கிய மிக சில பெண் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக... அவர் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பின் மையத்தில் நின்று.. நம்பிக்கையுடன் முன் நின்று வழிநடத்தி திரைப்பட தயாரிப்பு செயல்முறையில் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக திட்டமிட்டு செயல்படுத்தி இயக்குகிறார். பரந்து விரிந்த அரங்கங்கள்- சிக்கலான நுட்பமான சண்டைக் காட்சிகள் மற்றும் சர்வதேச அளவிலான தயாரிப்பு மதிப்பு ஆகியவற்றை கையாளும்போது படைப்பின் தொலைநோக்குப் பார்வையையும்... செயல்பாட்டு கட்டுப்பாட்டையும்.. சமநிலைப்படுத்தி, ஒவ்வொரு விசயத்திலும் ஆழ்ந்து கவனம் செலுத்தும் ஒரு இயக்குநரின் செயல்பாடுகளை... இந்த காணொலியில் உள்ள காட்சிகள் பறைசாற்றுகின்றன.
கீது மோகன்தாஸ் இயக்கிய 'டாக்ஸிக் : எ ஃபேரிடேல் ஃபார் கிரோன் -அப்ஸ் ' திரைப்படத்தில் யாஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் , தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கே. வி. என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'டாக்ஸிக்' திரைப்படம்- அதன் பிரம்மாண்டம்... தனித்துவம்... ஆகிய காரணங்களால் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சினிமாவை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசித்து கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் விரைவில் உலகெங்கிலும் வெளியாக உள்ளது.
Tags: geethu mohandas, toxic
