கல்லல் குளோபர் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், எழில் இயக்கத்தில், இமான் இசையமைப்பில், பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் பிரியா, ரோபோ சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘யுத்த சத்தம்’.

இப்படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி இன்று ஆகஸ்ட் 22 வெளியிட்டார்.

எழில் இயக்கத்தில் உருவாகி வரும் 13வது படம் இது. முதல் முறையாக பார்த்திபன், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கிறார்கள்.

எழிலின் 12வது படமான ஜி.வி.பிரகாஷ்குமார்  ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகளில் உள்ளது.