2018ம் ஆண்டு வெளிவந்த கன்னடப் படமான ‘கேஜிஎப்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அப்படத்தின் இரண்டாம் பாகமான ‘கேஜிஎப் 2’ தயாராகி வருகிறது. படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

இப்படத்தை ஜுலை மாதம் 16ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் கொரானோ இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக அப்போது படத்தை வெளியிடவில்லை.

இன்று படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியாக அடுத்த வருடம் 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.

இப்படத்தின் டீசர் ஏற்கெனவே வெளியாகி பெரிய சாதனையைப் படைத்து அதிக பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்தியா முழுவதுமாக தியேட்டர்கள் இன்னும் 100 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்படாத காரணத்தால்தான் படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புதிய அறிவிப்புத் தேதியை வெளியிட்டுள்ள படக்குழுவினர், “இன்றைய நிச்சயமற்ற நிலைகள் நம் தீர்மானத்தை தாமதப்படுத்தும், ஆனால் நிகழ்வுகள் வாக்குறுதியளித்தபடி உள்ளது,” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.