மறைந்த முதலமைச்சரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘தலைவி’ திரைப்படம் செப்டம்பர் 10ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், கங்கனா ரணவத், அரவிந்த்சுவாமி, நாசர், சமுத்திரக்கனி, பூர்ணா மற்றும் பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.  

இப்படத்தை கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி வெளியிட அறிவித்திருந்தார்கள். ஆனால், கொரானோ இரண்டாவது அலையின் காரணமாக வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இன்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டை இன்று அறிவித்துள்ளார்கள்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.