ஹரி, அருண் விஜய் படத்தின் பெயர் ‘யானை’
09 Sep 2021
டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.சக்திவேல் தயாரிப்பில், ஹரி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படத்திற்கு ‘யானை’ என்ற பெயரை அறிவித்துள்ளார்கள்.
அருண் விஜய்யின் 33வது படமான இந்தப் படத்தின் முதல் பார்வையை விஜயசேதுபதி, கீர்த்திசுரேஷ், ஆர்யா, ஆதி, விஜய்ஆண்டனி, டோவினோ தாமஸ், அனுராக் காஷ்யப், விஷ்ணுவிஷால், சாந்தனு, அதர்வா, விக்ரம்பிரபு, சிபிராஜ், பா.ரஞ்சித், விக்னேஷ்சிவன், சீனுராமசாமி, பிரசன்னா, அசோக்செல்வன், கிருஷ்ணா, ஆர்.பார்திபன், சேரன், கவுதம்வாசுதேவ்மேனன், வெங்கட்பிரபு, அறிவழகன்,சாம்.சி.எஸ், நவீன், வரலட்சுமி,ஐஸ்வர்யாராஜேஷ், ரெஜினாகசண்ட்ரே, நிக்கிகல்ரானி, மஹிமாநம்பியார், வேதிகா, கார்த்திக்நரேன், அஜய்ஞானமுத்து ஆகிய 33 சினிமா பிரபலங்கள் சேர்ந்து வெளியிட்டுள்ளார்கள்.
‘சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3’ என மூன்று பாகங்களை இயக்கிய ஹரி அடுத்து ‘யானை’ என தலைப்பை அறிவித்துள்ளதால் இனி அந்த சீரிசில் அடுத்தடுத்த பாகங்களை இயக்குவாரோ என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்படத்தில் சமுத்திரக்கனி, ராதிகா, யோகிபாபு, KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் முதலான பகுதிகளில் கடந்த மாதம் முதல் நடந்து வந்தது. இரண்டு பாடல்கள் மற்றும் அனல் அரசுவின் அற்புதமான சண்டை அமைப்பில் மூன்று சண்டைக்காட்சிகள் உட்பட, படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் தூத்துக்குடி, ராமேஸ்வரம், பழநி பகுதிகளில் நடைபெற உள்ளது.
கிராமமும் நகரமும் கலந்த பின்னணியில் குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
Tags: arun vijay, hari, yaanai, priya bhavani sankar, gv prakashkumar