விஷால், ஆர்யா நடிக்கும் ‘எனிமி’, வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
07 Sep 2021
மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விஷால், ஆர்யா, மம்தா மோகன்தாஸ், மிருணாளினி ரவி, பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘எனிமி’.
இப்படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14ம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.
இப்படத்தின் பாடல்களுக்கு தமன் இசையமைக்க, பின்னணி இசையை சாம் சி.எஸ். அமைக்கிறார்.
இப்படத்தின் டீசர் வெளிவந்து அதற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
‘அவன் இவன்’ படத்திற்குப் பிறகு விஷால், ஆர்யா இருவரும் இணைந்து நடிக்கும் படம் இது.
விஷால், ஆர்யா இருவருமே படத்தின் கதாநாயகர்கள்தானாம். ஒருவருக்கு மற்றொருவர் எதிரி, அதனால்தான் படத்தின் பெயர் ‘எனிமி’ என்கிறார் படத்தின் இயக்குனர் ஆனந்த் சங்கர்.
Tags: enemy, Vishal , Arya, Anand Shankar, sam cs, thaman, Prakash Raj , Thambi Ramaiah , Karunakaran , Mamta Mohandas, Mirnalini Ravi