உங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா? – கூலாக பதிலளித்த விக்ரம்

12 Aug 2024

உங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு விக்ரம் அளித்த பதில் வைரலாகி வருகிறது.

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்காக படக்குழுவினர் பல்வேறு ஊர்களில் விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

மதுரையில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியில் “கஷ்டப்பட்டு படங்களில் நடித்தாலும், அஜித் மற்றும் சூர்யா நடிகர்கள் அளவுக்கு ரசிகர்கள் இல்லையே” என்ற கேள்வியை விக்ரமிடம் கேட்கப்பட்டது. அதற்கு விக்ரம் அளித்த பதில் பின்வருமாறு:

”என்னோட ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? அவர்களை திரையரங்கில் பாருங்கள். அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் என் ரசிகர்கள் தான். நீங்கள் திரையரங்கிற்கு வருவீர்கள் அல்லவா? இதே கேள்வியை என் ரசிகர்களிடமும் கேளுங்கள்.

பெரிய நடிகராக வந்துவிட்டேன். ’தூள்’, ’சாமி’ போன்ற படங்களில் நடித்தவன் தான். எனக்கு தெரியாதது கிடையாது. சினிமாவை வேறு எங்கு கொண்டு போகலாம் என்ற முயற்சியில் இறங்கினேன். அந்த முயற்சிகள் எல்லாம் செய்ததால் மட்டுமே ’தங்கலான்’”

இவ்வாறு விக்ரம் பதிலளித்துள்ளார்.

இந்த பதில் கூறும்போது, எந்தவித கோபமும் இல்லாமல் கூறியிருக்கிறார். மேலும் கேள்விக் கேட்டவரை கலாய்த்தது மட்டுமன்றி அவருடைய கூலாக பதிலளித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: vikram, thangalaan

Share via: