பழைய நினைவுகளில் மூழ்கிய ரஜினி
12 Aug 2024
‘கூலி’ படப்பிடிப்பில் பழைய நினைவுகளில் மூழ்கியிருக்கிறார் ரஜினி.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், செளபின் ஷாகீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கூலி’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் ரஜினி பங்கேற்ற சண்டைக்காட்சி ஒன்றிணை படமாக்கினார்கள். சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் ஹோட்டலில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. ரஜினி பங்கேற்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஏனென்றால் சென்னை சிட்டிக்குள் உள்ள முக்கியமான இடம் என்பதால் ரஜினி எப்போது வருகிறார், செல்கிறார் என அனைத்திலும் ரகசியம் காக்கப்பட்டது.
இதில் முதல் நாள் படப்பிடிப்பு இடைவேளையில் உட்லண்ட்ஸ் ஹோட்டலை சுற்றிப் பார்த்திருக்கிறார் ரஜினி. அப்போது பழைய நினைவுகள், விஷயங்கள் என தன்னோடு இருந்தவர்களிடம் பகிர்ந்து சிலாகித்திருக்கிறார். உட்லண்ட்ஸ் ஹோட்டலில் தான் வழக்கமாக உட்கார்ந்து பேசும் இடத்தில் சேர் ஒன்றை போட்டு நீண்ட நேரம் மெளனமாக அமர்ந்திருக்கிறார்.
ரஜினியின் இந்த நடவடிக்கைப் பார்த்து படக்குழுவினர் பலரும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். இந்தளவுக்கு ரஜினியின் வாழ்க்கையில் உட்லண்ட்ஸ் ஹோட்டல் பங்காற்றி இருக்கிறதா என்று நினைத்திருக்கிறார்கள்.
Tags: rajinikanth-coolie