நடிகராக ஒப்பந்தமானார் லோகேஷ் கனகராஜ்

12 Aug 2024

’புறநானூறு’ படத்தில் நடிகராக ஒப்பந்தமாகி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படம் ‘புறநானூறு’. புதிய தயாரிப்பாளர் ஆகாஷ் இதனை பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ளார். இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தினை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது படக்குழு.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ். அவருக்கான லுக் டெஸ்ட் முடிந்திருக்கிறது. முதலில் சூர்யா நடிப்பதாக இருந்த இந்தக் கதையில் துல்கர் சல்மான் நடிக்கவிருந்தார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் தான் லோகேஷ் கனகராஜ் நடிக்கவுள்ளார்.

’கூலி’ படத்தினை டிசம்பருக்குள் முடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அதனைத் தொடர்ந்து ‘புறநானூறு’ படத்தில் நடித்துக் கொண்டே, ‘கைதி 2’ முதற்கட்டப் பணிகளை கவனிக்கவுள்ளார். சிவகார்த்திகேயன் – லோகேஷ் கனகராஜ் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பதால், இருவருமே சந்தோஷமாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

விரைவில் சிவகார்த்திகேயன் – லோகேஷ் கனகராஜ் இருவருமே பங்குபெறும் போட்டோ ஷுட் நடைபெறவுள்ளது. அன்று தான் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவுள்ளது.

Tags: lokesh kanagaraj, purananooru, sudha kongara

Share via: