‘மூக்குத்தி அம்மன் 2’ இயக்குநராக சுந்தர்.சி ஒப்பந்தம்
12 Aug 2024
’மூக்குத்தி அம்மன் 2’ இயக்குநராக சுந்தர்.சி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த படம் ‘மூக்குத்தி அம்மன்’. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இதில் நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் மாபெரும் வரவேற்பினை பெற்றது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்க ஆலோசித்து வந்தார்கள்.
ஆனால், பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடிக்க ‘மாசாணி அம்மன்’ என்ற படம் உருவாகிறது. இதில் த்ரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு போட்டியாக வேல்ஸ் நிறுவனம் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை அறிவித்தது.
இதில் நயன்தாரா நடிக்கவிருப்பதையும் உறுதி செய்தது. ஆனால், இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை எனவும் கூறியது. இதற்காக பல்வேறு இயக்குநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இறுதியாக, ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை சுந்தர்.சி இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
தற்போது சுந்தர்.சி இயக்கிவரும் படத்தினை முடித்துவிட்டு ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கவுள்ளார். ‘அரண்மனை 4’ வெற்றியால் இந்தப் படத்திற்கு பெரும் தொகையினை சம்பளமாக பெற்றுள்ளார் சுந்தர்.சி.
Tags: sundar c, mookuthi amman 2