விஜய்யுடன் படம் நடக்குமா? – வெற்றிமாறன் பதில்

24 Apr 2024

விஜய்யுடன் படம் நடக்குமா என்ற கேள்விக்கு வெற்றிமாறன் பதிலளித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்யை நடிக்க வைக்க பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், இருவருமே வெவ்வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் இந்தக் கூட்டணி இணையாமல் இருக்கிறது. அவ்வப்போது இந்தக் கூட்டணி இணைய இருப்பதாக செய்திகள் மட்டுமே வெளியாகி வந்தது.

இதனிடையே ‘விஜய் 69’ படத்தினை வெற்றிமாறன் இயக்கவுள்ளார் என்ற செய்தி வெளியானது. அந்தச் சமயத்தில் ‘விடுதலை 2’ பணிகளில் மும்முரமாக இருந்தார் வெற்றிமாறன். ஆகையால் இது உண்மையில்லை என்று கருதப்பட்டது.

ஆனால், இணையத்தில் போஸ்டர் ஒன்று வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் வெற்றிமாறனிடம் கேட்கப்பட்டது. அதற்கு “நீண்ட நாட்களுக்கு முன்பு பேசினோம். அது இப்போது நடைபெறும் என தெரியவில்லை. அப்படி ஒன்று இல்லை என்றே நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.

இதன் மூலம் விஜய் – வெற்றிமாறன் கூட்டணி வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

Tags: vijay, vetrimaaran

Share via:

Movies Released On May 19