விஜய் டிவியில் நாளை ‘முரட்டு சிங்கிள்ஸ்’ இறுதிப்போட்டி
08 May 2021
ஸ்டார் விஜய் டிவியில் இளைஞர்களுக்காக நகைச்சுவை கலந்த ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி ‘முரட்டு சிங்கிள்ஸ்’.
இந்த நிகழ்ச்சி பத்து போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி, அவர்களில் ஐந்து போட்டியாளர்கள் இப்போது இறுதிப் போட்டிக்கு வந்துள்ளார்கள்.
குட்டி கோபி, வி.ஜே. விஜய், சாம் விஷால், சில்மிசம் சிவா, எனியன் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் இறுதி சுற்றில் போட்டி போடுகிறார்கள்.
இவர்கள் நிகழ்ச்சியில் நடுவர்களாக இருக்கும் டிவி நடிகைகளைக் கவர்ந்து அவர்களின் அன்பைப் பெறவேண்டும்.
அப்படி பல போட்டிகளாகிய IQ, EQ மற்றும் LQ சவால்களை அவர்கள் சந்திக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்குக் கொடுக்கப்படும் டாஸ்குகளில் வெற்றி பெற வேண்டும். அவர்களில் யார் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்களோ அவர்களே இறுதிப் போட்டியின் வெற்றியாளர்.
யாஷிகா ஆனந்த், அபிராமி, கேப்ரியெல்லா, ஸ்ரீநிதி, ஜாக்குலின் ஆகியோர் நடுவர்களாக இருக்க, பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் மா கா பா ஆனந்த் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்கள்..
முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியின் பிரமாண்டமான இறுதிப் போட்டியை நாளை 9 மே 2021, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்டார் விஜய்யில் பார்க்கலாம்.
Tags: vijay tv, murattu singles