கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், தனுஷ், லால், யோகிபாபு, ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் ஏப்ரல் 9ம் தேதி வெளியான படம் ‘கர்ணன்’.

இப்படம் வெளியான மறுநாளே தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும்தான் அனுமதி என அரசு அறிவித்தது. அந்தக் கட்டுப்பாட்டிலும் படத்திற்கு ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக்கினர்.

இருந்தாலும், கொரானோ தொற்று காரணமாக ‘கர்ணன்’ படம் வெளியான இரண்டு வாரங்களில் தியேட்டர்கள் மூடப்பட்டது. பலரும் படத்தைப் பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

அதனால், படத்தை ஒரு மாதத்தில் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அடுத்த வாரம் மே 14ம் தேதி இப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனத் தெரிகிறது.

தனுஷ் நடித்துள்ள ‘ஜகமே தந்திரம்’ படம் ஜுன் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.