ஹிந்தித் திரையுலகில் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் ஒரு நடிகை கங்கனா ரணவத்.

தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் கருத்துக்களை பதிவிட்டதால் அவருடைய டுவிட்டர் கணக்கை டுவிட்டர் நிர்வாகம் சமீபத்தில் நிரந்தரமாக முடக்கியது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடித்து முடித்துள்ளார் கங்கனா.

அவர் தற்போது கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அது குறித்து இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,

“கடந்த சில நாட்களாக என் கண்களில் லேசான எரிச்சலும், சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தேன். ஹிமாச்சல் செல்வேன் என நினைத்தேன். அதனால் நேற்று பரிசோதனை மேற்கொண்டேன், இன்று எனக்கு கோவிட் பாசிட்டிவ்.

என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இந்த வைரஸ் என்னுடைய உடலில் பார்ட்டி வைக்கும் எனத் தெரியாது. ஆனால், இப்போது அதை நான் தகர்த்தெறிவேன் என்பது எனக்குத் தெரியும்.

உங்கள் சக்தியை மீறி எதையும் விட வேண்டாம். நீங்கள் பயந்தால் அது உங்களை பயமுறுத்தும். கோவிட்டை அழிக்க வாருங்கள், அது சாதாரண சிறிய ப்ளு போன்றது. அது நம் மீது அதிகப்படியான அழுத்ததையும் மனரீதியாக பாதிப்பையும் ஏற்படுத்துகிறது,” எனத் தெரிவித்துள்ளார்.

கங்கனா விரைவில் குணமடைய ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.