விஜய் டிவி - 2021 பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

12 Jan 2021

விஜய் டிவி - 2021 பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகள்

14 ஜனவரி 2021, வியாழக்கிழமை

காலை 9 மணி

சிறப்பு பட்டிமன்றம் - குடும்பத்தின் ‘பிக் பாஸ்’ சம்பாதிக்கும் கணவனா, இல்லை அன்பான மனைவியா..

பேராசியர் ஞான சம்பந்தம் தலைமையில் ஈரோடு மகேஷ், விஜய சுந்தரி, எழிலரசி, மோகன சுந்தரம், ராஜ்மோகன் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.

காலை 10.30 மணி

அர்ஜுன் வர்மா - திரைப்படம்

தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ ஆக வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படத்தின் தமிழாக்கம். விஜய் தேவரகொன்டா, ஷாலினி பான்டே மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பிற்பகல் 2.30 மணி

ஜெயம் ரவியின் பூமி - சிறப்பு நிகழ்ச்சி

நடிகர் ஜெயம் ரவியின் 25வது படமான பூமி படத்தின் கொண்டாட்டம். படக்குழுவினர் கலந்து கொண்டு அவர்களது அனுபவங்களைப் பகிர்கிறார்கள். அர்ச்சனா, ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்குகிறார்கள்.

பிற்பகல் 4.30 மணி

இம்சை அரசன் - நகைச்சுவை நிகழ்ச்சி 

அந்தக் காலம், இந்தக் காலம் கலந்த, டைம் டிராவலிங் பற்றிய சுவாரசியமான டிராமா, நடிப்பு, நகைச்சுவை கலந்த நிகழ்ச்சி. மகாபா ஆனந்த் தொகுத்து வழங்குகிறார்.

15 ஜனவரி 2021, வெள்ளிக்கிழமை

காலை 9.30 மணி

நீயா நானா - பொங்கல் ஸ்பெஷல்

நாட்டுப்புறப் பாடகர்கள் மற்றும் கானா பாடகர்கள் இணைந்த சுவாரசியமான பேச்சரங்கம். கோபிநாத் தொகுத்து வழங்குகிறார்.

காலை 11 மணி

கேங் லீடர் - புதிய திரைப்படம்

நானி, பிரியங்கா அருள்மோகன், லட்சுமி, சரண்யா மற்றும் பலர் நடித்த தெலுங்கு திரைப்படத்தின் தமிழாக்கம்.

பிற்பகல் 2.30 மணி

பெண்குயின் - திரைப்படம்

கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம்.

 

Tags: vijay tv, vijay television, star vijay

Share via: