‘விஜய் த மாஸ்டர்’ - ஹிந்தி டிரைலர் வெளியீடு
07 Jan 2021
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் ஹிந்தியில் ‘விஜய் த மாஸ்டர்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ஜனவரி 14 அன்று வெளியாக உள்ளது.
தமிழில் வெளியிடப்பட்ட ‘மாஸ்டர்’ டீசரையே, ஹிந்தியில் டப்பிங் செய்து அதை ‘டிரைலர்’ ஆக மாற்றி இன்று யு டியூபில் வெளியிட்டுள்ளார்கள். தெலுங்கு டீசர் மூன்று வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.
தமிழ் டீசர் 54 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டீசர் 5 மில்லியன் பார்வைகளையும் இதுவரை பெற்றுள்ளது.
விஜய் நடிக்கும் படங்கள் பொதுவாக தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும்தான் டப்பிங் செய்து வெளியாவது வழக்கம். ‘பிகில்’ படத்திற்குப் பிறகு இப்படத்தையும் கன்னடத்தில் டப்பிங் செய்துமுதல் முறையாக ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
தென்னிந்திய அளவில் விஜய் நடிக்கும் படங்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் நல்ல வசூலைப் பெறும். இப்போது முதல் முறையாக ஹிந்தியிலேயே டப்பிங் ஆகி வட இந்தியாவில் வெளியாவதால் படத்திற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்துள்ளது.
பி 4 யு மோஷன் பிக்சர்ஸ் இப்படத்தை ஹிந்தியில் வெளியிடுகிறது.
விஜய் த மாஸ்டர் - டிரைலர்
மாஸ்டர் - தெலுங்கு டீசர்
மாஸ்டர் - தமிழ் டீசர்
Tags: master, vijay, vijay sethupathi, anirudh, lokesh kanagaraj