மாஸ்டர், ஈஸ்வரன் - பொங்கல் ரிலீஸ் உறுதி
07 Jan 2021
விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ள ‘மாஸ்டர்’, சிம்பு, நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ ஆகிய இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளிவருவது உறுதி என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அது கொரானோ பாதுகாப்பு வழிமுறைகளுக்கு எதிரானது என மத்திய அரசு தரப்பில் மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனால், தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியது ரத்து செய்யப்பட்டு, மீண்டும் 50 சதவீதம் மட்டுமே தொடர உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
50 சதவீத இருக்கைகளுடன் ‘மாஸ்டர், ஈஸ்வரன்’ ஆகிய படங்கள் வெளியானால் எதிர்பார்த்த அளவிற்கு வசூலிக்க முடியாது என சிலர் கருத்து தெரிவித்தனர். அதனால், இரண்டு படங்களின் வெளியீட்டில் ஒரு குழப்பம் நிலவியது.
இதனிடையே, இரண்டு படங்களுமே திட்டமிட்டபடி பொங்கலுக்கு வெளியாகும், அதில் எந்த மாற்றமும் இருக்காது என திரையுலக வட்டாரங்களில் தெரிவித்துள்ளார்கள்.
Tags: master, eeswaran, vijay, vijay sethupathi, malavika mohanan, nidhi agarwal