‘விடுதலை 2’ அப்டேட்: சிறுவேடத்தில் விஜய் சேதுபதி மகன்
05 Aug 2024
‘விடுதலை 2’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடித்துள்ளார்.
’விடுதலை’ படத்தைத் தொடர்ந்து ‘விடுதலை 2’ உருவாகி வருகிறது. இதனை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் படக்குழு பணிபுரிந்து வருகிறது. வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
எல்ரெட் குமார் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கவுள்ளது படக்குழு. இதில் முதல் பாகத்தின் கதாபாத்திரங்கள் தவிர்த்து சில முக்கிய கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார் வெற்றிமாறன்.
அதில் மஞ்சு வாரியர், அனுராக் கஷ்யாப் மற்றும் கிஷோர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மேலும், சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடித்திருக்கிறார். கண்டிப்பாக அவருடைய கதாபாத்திரம் பேசப்படும் என்கிறது படக்குழு.
Tags: vijay sethupathi, viduthalai 2