மீண்டும் படம் இயக்க தயாராகிவிட்டார் தனுஷ்
03 Aug 2024
‘ராயன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டுமொரு படத்தை இயக்கி நடிக்க முடிவு செய்திருக்கிறார் தனுஷ்.
தனுஷ் இயக்கி நடித்து வெளியான படம் ‘ராயன்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்திருந்தார்கள். தணிக்கையில் ஏ சான்றிதழுடன் வெளியான இந்தப் படம் அமோக வரவேற்பைப் பெற்றது.
உலகளவில் சுமார் 100 கோடி வசூலை கடந்துவிட்டது. மேலும், தமிழகத்தில் 40 கோடி பங்குத் தொகையை தாண்டும் என்று வர்த்தகர்கள் கணித்திருக்கிறார்கள். ஏ சான்றிதழ் பெற்ற ஒரு படம் இவ்வளவு வசூல் செய்வது இதுவே முதல் முறையாகும்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தை இயக்கி நடிக்க முடிவு செய்துவிட்டார் தனுஷ். இதற்கான கதை தயாராகிவிட்டது. இந்தப் படத்தில் தனுஷுடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு ஆடி மாதம் முடிந்தவுடன் தொடங்கவுள்ளார்கள். இந்தப் படத்தினை ஆகாஷ் தயாரிக்கவுள்ளார். இவர் தான் ‘புறநானூறு’ படத்தையும் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags: dhanush