கைவிடப்பட்டதா நயன்தாரா – நித்திலன் படம்?

05 Aug 2024

நித்திலன் இயக்கத்தில் நயன்தாரா படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

நித்திலன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் கஷ்யாப், மம்தா மோகன்தாஸ், நட்டி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து தயாரித்து வெளியிட்டது. இதற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. விஜய் சேதுபதியின் திரையுலக வாழ்க்கையில் அவர் நாயகனாக நடித்து 100 கோடி வசூலை கடந்த ஒரே படம் ‘மகாராஜா’ என்பது குறிப்பிடத்தக்கது.

‘மகாராஜா’ படம் வெளியாகும் முன்பே, நித்திலன் இயக்கவுள்ள அடுத்த படத்தையும் பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனமே தயாரிக்க முன்வந்தது. இதில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமானார். இது தொடர்பான ஒப்பந்தம் மட்டும் கையெழுத்தாகாமல் இருந்தது.

‘மகாராஜா’ வெற்றிக்குப் பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களும் நித்திலனிடம் கதைகள் கேட்டு வந்தார்கள். இதனால் நயன்தாரா படத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருக்கிறது பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம். ஏதேனும் பெரிய நடிகர் நித்திலன் கதைக்கு ஒகே சொன்னால், அந்தப் படத்தை தொடங்கிவிடலாம் என்று அமைதி காக்கிறது.

இதனால் நித்திலன் – நயன்தாரா படம் எப்போது தொடங்கும் அல்லது கைவிடப்பட்டதாக என்பது விரைவில் தெரியவரும்.

Tags: nayanthara, nithilan

Share via:

Movies Released On September 14