விஜய் 65வது படத்தின் தலைப்பு ‘பீஸ்ட்’

21 Jun 2021

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் படத்தின் பெயரும், முதல் பார்வையும் நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரையில் ‘விஜய் 65, தளபதி 65’ எனக் குறிப்பிடப்பட்டு வந்த படத்திற்கு ‘பீஸ்ட்’ எனப் பெயர் வைத்துள்ளார்கள். ‘பீஸ்ட்’ என்பதற்கு ‘மிருகம், விலங்கு’ என அர்த்தம்.

இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் ஆரம்பமாகி நடந்தது. அதன்பின் கொரானோ தொற்று பரவல் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டதால் இப்படப்பிடிப்பையும் நிறுத்தினார்கள்.

தற்போது ஊரடங்கு தளர்வுகளில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

இன்று வெளியாகியுள்ள ‘பீஸ்ட்’ போஸ்டர் சம்பந்தமான டிவீட்டுகளில் புதிய சாதனை படைக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

Tags: vijay, beast, nelson dilipkumar, anirudh, sun pictures, pooja hegde,

Share via: