’விஜய் 69’ படத்திலிருந்து டிவிவி வெளியேற காரணம் என்ன?

20 Apr 2024

’விஜய் 69’ படத்திலிருந்து டிவிவி நிறுவனம் வெளியேறியதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.

’கோட்’ படத்தினை முடித்துவிட்டு, ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இது விஜய் நடிப்பில் உருவாகும் கடைசி படமாகும். இந்தப் படத்திற்கு பிறகு தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார் விஜய். இதனால் ‘விஜய் 69’ படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

இந்தப் படத்தினை டிவிவி நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இதற்கான ஒப்பந்தம் மட்டுமே போடவில்லை, ஆனால் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. திடீரென்று ‘விஜய் 69’ படத்தின் தயாரிப்பு பொறுப்பிலிருந்து டிவிடி நிறுவனம் விலகிவிட்டது.

இது தொடர்பாக விசாரித்த போது, ‘விஜய் 69’ படத்தின் ஒப்பந்தமே போடவில்லை, அதற்குள் படத்தின் உரிமைகள் விற்பனை பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டது டிவிவி நிறுவனம். இது தொடர்பாக பேசியதை, விஜய் தரப்பிடம் உறுதிப்படுத்த விசாரித்துள்ளது ஓடிடி நிறுவனம். இதனால் கடும் அதிருப்திக்கு உண்டானது விஜய் தரப்பு.

இன்னும் ஒப்பந்தமே போடவில்லை, சம்பளம் பேசவில்லை. அதற்குள் உரிமைகள் பேச்சுவார்த்தை தொடங்கியதன் கோபத்தில் தான் விஜய் வேறு தயாரிப்பாளர் போய்விடலாம் என்ற முடிவினை எடுத்திருக்கிறார்.

டிவிவி நிறுவனத்திற்கு பதிலாக 7 ஸ்கிரீன் அல்லது பேஷன் ஸ்டூடியோஸ், ‘விஜய் 69’ படத்தினை தயாரிக்கவுள்ளது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

Tags: vijay, goat, vijay 69, h vinoth, dvv entertainment

Share via: