மீண்டும் இணையும் அஜித் – சிவா கூட்டணி
20 Apr 2024
சிவா இயக்கத்தில் மீண்டும் அஜித் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
‘விடாமுயற்சி’ படத்தினை முடித்துவிட்டு ‘குட் பேட் அக்லி’ படத்திற்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் அஜித். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. இந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.
‘விடாமுயற்சி’ படப்பிடிப்பின் போதே, மீண்டும் இணையலாமா என்று சிவாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் அஜித். அப்போது ‘கங்குவா’ படப்பிடிப்பு பணிகள் இருந்ததால், ஒரு படம் விட்டு பண்ணலாம் என்று சிவா தெரிவித்திருக்கிறார். இப்போது ‘கங்குவா’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதனை பார்த்துக் கொண்டே அஜித் படத்தின் கதை விவாத பணிகளையும் கவனித்து வருகிறார் சிவா.
’வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இந்தப் படத்தினை சன் பிக்சர்ஸ் அல்லது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் என தெரிகிறது.
Tags: ajith siva, kanguva, viswasam