’இந்தியன் 2’ படத்துக்கு இப்படியொரு நிலையா?
20 Apr 2024
’இந்தியன் 2’ படத்துக்கு இப்படியொரு நிலையா என்று வர்த்தக நிபுணர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கமல், சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்து வருகின்றன. இதுவரை இந்தப் படத்தின் டீஸர் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
‘இந்தியன் 2’ டீஸருக்கு இணையத்தில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இதனிடையே, இந்தப் படத்தின் இந்தி வியாபாரம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. ஏனென்றால் ’புஷ்பா 2’ – 200 கோடி, ‘கல்கி’ – 100 கோடி, ’கேம் சேஞ்சர்’ – 75 கோடி, ’தேவரா’ – 45 கோடி என இந்தி திரையரங்க உரிமை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் அனில் அதானி கைப்பற்றி இருக்கிறார்.
ஆனால், ‘இந்தியன் 2’ படத்தின் இந்தி திரையரங்க உரிமை 20 கோடிக்கு மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது வர்த்தக நிபுணர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. ஏனென்றால், ‘இந்தியன்’ பெரும் வரவேற்பைப் பெற்ற படம், அதன் 2-ம் பாகம் என்ற பேச்சு இருந்துமே 20 கோடிக்கு மட்டுமே விற்பனையாகி இருக்கிறது. இதனை பென் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
Tags: indian 2, kamal haasan, shankar, anirudh