மெதுவாக நகரும் படப்பிடிப்பு: கார்த்தி அதிருப்தி
20 Apr 2024
படப்பிடிப்பு மிகவும் மெதுவாக நகர்வதால் கார்த்தி கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தினை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ‘வா வாத்தியார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இதனிடையே, இந்தப் படத்தின் படப்பிடிப்பு எதிர்பார்த்ததை விட மிகவும் மெதுவாக நகர்வதால் கார்த்தி கடும் அதிருப்தியில் இருக்கிறார். ஏனென்றால் இந்தப் படத்திற்குப் பிறகு தொடங்கப்பட்ட பிரேம்குமார் படத்தினை முடித்துவிட்டார் கார்த்தி. ஆனால், இன்னும் நலன் குமாரசாமி படத்தின் படப்பிடிப்பு சுமார் 20 நாட்கள் இருக்கிறது.
நலன் குமாரசாமி படத்தினை முடித்துவிட்டு, ‘சர்தார் 2’ படத்துக்கு தயாராக வேண்டும் என்பதால் விரைவாக படப்பிடிப்பினை முடிக்க படக்குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளார் கார்த்தி. மேலும், 75 நாட்கள் படப்பிடிப்பு என்று வாங்கப்பட்ட கார்த்தியின் தேதிகள் இப்போது 100 நாட்களை கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
Tags: karthi, nalan kumarasamy, sardar 2