சரிகமா ஒரிஜினல்ஸ் வழங்கும் “எண்ட ஓமனே” ஆல்பம் பாடல்

20 Apr 2024

 

உலகளவில் இசைத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கி வரும் சரிகமா நிறுவனம், அடுத்ததாக, தர்ஷன், அஞ்சு குரியன் நடிப்பில், கார்த்திக் ஶ்ரீ இயக்கத்தில், S கணேசன் இசையில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல் வரிகளில், பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன் குரல்களில், இளைஞர்களை கொள்ளை கொள்ளும் அற்புதமான “எண்ட ஓமனே” எனும் ஆல்பம் பாடலை வெளியிட்டுள்ளது.

உலகளவில் இசைத்துறையில் ஆளுமைமிக்க நிறுவனமாக, பல்லாண்டுகளாக கொடிகட்டிப்பறக்கும் நிறுவனம் “சரிகமா”. திரை இசைப் பாடல்கள் மட்டுமின்றி, சுயாதீன இசையை தொடர்ந்து ஆதரித்து வரும் சரிகமா , பல புதுமையான ஆல்பங்களையும், சுயாதீன கலைஞர்களின் பாடல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இளைஞர்கள் கொண்டாடி மகிழும் “எண்ட ஓமனே” எனும் புது ஆல்பம் பாடலை தற்போது வெளியிட்டுள்ளது.

கனா படப்புகழ் தர்ஷன், மலையாள இளம் நடிகை அஞ்சு குரியன் நடிப்பில், பெரும் பொருட்செலவில், கேரள திருமண வீட்டின் கொண்டாட்ட பின்னணியில், வண்ணங்கள் பொழியும் அற்புத விஷுவல்களுடன், மனதை மயக்கும் மெலடியில் இப்பாடல் உருவாகியுள்ளது.

இயக்குநர் கார்த்திக் ஶ்ரீ இப்பாடலை வடிவமைத்து இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் S கணேசன் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்கத்தினை R கிஷோர் செய்துள்ளார். பாடலின் நடனத்தை அஸார் வடிவமைத்துள்ளார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் திரைப்பட பாடலுக்கு நிகராக, அட்டகாசமான உருவாக்கத்தில், மனதை கொள்ளை கொள்ளும் இந்தப்பாடல் வெளியான வேகத்தில், இணையம் முழுக்க பெரும் வரவேற்பைப் பெற்று, வைரலாகி வருகிறது. மேலும் அனைத்து இசைத் தளங்களிலும் சார்ட்பஸ்டர் லிஸ்டிலும் இடம்பிடித்து வருகிறது.

நடிப்பு: தர்ஷன் | அஞ்சு குரியன் | ஸ்ருதி செல்வம் I விக்னேஷ்

தொழில்நுட்ப குழு
கரு உருவாக்கம் & இயக்கம்: கார்த்திக் ஸ்ரீ.
இசை: கணேசன் S.
ஒளிப்பதிவு : கார்த்திக் முத்துக்குமார்.
நடன அமைப்பாளர்: அஸார்.
கலை இயக்குனர்: கிஷோர் R.
எடிட்டர்: ஆஷிஷ் ஜோசப்.
பாடல் வரிகள்: விக்னேஷ் ராமகிருஷ்ணா.
பாடகர்கள் : சக்திஸ்ரீ கோபாலன், ஹர்ஷவர்தன்.
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: நவீன் வரதராஜன்.
ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா.
ஸ்டில்ஸ்: சிவா.
விளம்பர வடிவமைப்பாளர் - கார்த்திக் ராஜா
கலரிஸ்ட் - ராஜ ராஜன்
தயாரிப்பாளர்கள்: கார்த்திக் ஸ்ரீ, ஐஸ்வர்யா சுப்ரமணி, மகாலட்சுமி சம்பத்.
நிர்வாக தயாரிப்பாளர்: சரவண குமார். கார்த்திக் அண்ணாமலை.

Tags: Ente Omane , Darshan, Anju Kurian,Shakthisree Gopalan

Share via: