’விடுதலை 2’வில் உள்ள சிக்கல் என்ன?

29 Aug 2024

‘விடுதலை 2’ படத்தில் உள்ள சிக்கல் என்ன என்பது வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடுதலை 2’. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார்.

‘விடுதலை 2’ எப்போது வெளியீடு என்பதே தெரியாமல் உள்ளது. இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு இருக்கிறது. விஜய் சேதுபதி தேதிகளுக்காக படக்குழு காத்திருக்கிறது. அதுமட்டுமன்றி, இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்து பார்த்ததில் அதுவே 4 மணி நேரம் 17 நிமிடங்கள் இருக்கிறது.

இதனால், படக்குழுவினர் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். எந்தவொரு பிரச்சினை என்றால் தீர்க்கப்பட்டு, படத்தினை டிசம்பரில் வெளியிட்டுவிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள். திரையரங்கிற்கு 2:30 மணி நேர படமாக வெளியிட்டுவிட்டு, ஓடிடியில்  மொத்தமாக வெளியிடலாமா என்ற ஆலோசனை கடந்த ஒருவாரமாக நடைபெற்று வருகிறது.

திரையரங்கில் படம் வெற்றி பெற்றுவிட்டால், ஓடிடி வெளியீட்டிற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அதை வைத்து முழுமையான காட்சிகளும் இடம்பெறும் என்று விளம்பரப்படுத்தி பணம் அதிகமாக பெற்றுவிடலாம் என திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால், இவை அனைத்து நடைபெற முதலில் படப்பிடிப்பு முடியவேண்டுமே?

Tags: viduthalai 2, soori

Share via: