’வாடிவாசல்’ அப்டேட் கொடுத்த வெற்றிமாறன்

14 May 2024

பலரும் எதிர்பார்த்த ’வாடிவாசல்’ அப்டேட் கொடுத்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடுதலை 2’. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது முடிவடைந்தால் மட்டுமே சூர்யா நடிப்பில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் கவனம் செலுத்த தொடங்குவார் வெற்றிமாறன்.

ஆனால், ‘விடுதலை 2’ படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. தற்போது நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துக் கொண்ட வெற்றிமாறன், பின்பு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது ‘வாடிவாசல்’ குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் வெற்றிமாறன்.

அதில், “’விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் 20 நாட்கள் பாக்கி இருக்கிறது. அதனை முடித்துவிட்டு, அடுத்த மூன்று மாதத்தில் ‘வாடிவாசல்’ படத்தினை தொடங்கிவிடுவேன்” என்று தெரிவித்துள்ளார் வெற்றிமாறன். இந்தப் பதிலால் சூர்யாவின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

‘வாடிவாசல்’ படத்தில் சூர்யாவுடன் அமீர் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இந்தப் படத்தினை தாணு தயாரிக்கவுள்ளார்

Tags: vadivaasal, suriya, vetri maaran

Share via: