கணேஷ் வெங்கட்ராம் நடிக்கும் ‘உன் பார்வையில்’
22 Feb 2021
லவ்லி வேர்ல்டு புரொடக்ஷன் சார்பில் அஜய் சிங் தயாரிக்க, கபீர்லால் இயக்கும் படம் ‘உன் பார்வையில்’.
‘கஹோ நா பியர் ஹை, பர்தேஸ், தால்’ உள்ளிட்ட பல ஹிந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கபீர்லால் இப்படம் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மராத்தி மொழிகளில் படமாகிறது. தமிழில் கணேஷ் வெங்கட்ராம், பார்வதி நாயர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ரொமான்ஸ் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் கணேஷ் சைக்காலஜிஸ்ட் ஆகவும், பார்வதி நாயர் பிசினஸ்வுமானராகவும் நடிக்கிறார்கள்.
படம் பற்றி கணேஷ் வெங்கட்ராம் கூறுகையில்,
“பல படங்களில் கபீர் ஒளிப்பதிவில் செய்த மேஜிக் கண்டு பிரமித்திருக்கிறேன். அவர் என்னிடம் கதை சொன்னபோது பரபரப்பான சுவாரசியம் மிகுந்த கதையாக இருந்தது. என் கதாப்பாத்திரம் பல அடுக்குகள் கொண்டதாக இருந்தது. இம்மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவே காத்திருந்தேன். படம் அழகாக உருவாகி வருகிறது,” என்றார்.
பார்வதி நாயர் கூறுகையில்,
“நடிப்புக்கு சவால் தரும் கதாபத்திரம் என்னுடையது. என் முழு உழைப்பைத் தந்து நடித்திருக்கிறேன். கணேஷ் வெங்கட்ராம் மிகச்சிறந்த நடிகர். படப்பிடிப்பில் மிகவும் ஒத்துழைப்பாக இருந்தார். கபீர் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் அமைக்கும் விதம் அதை படமாக்கும் விதம் பிரமிப்பானது,” என்றார்.
இப்படத்தினை வரும் ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Tags: parvathi nair, ganesh venkatram, kabeerlal, un paarvaiyil