மீம்ஸ் கலைஞனாக நடிக்கும் ‘சாம்பியன்’ விஷ்வா

22 Feb 2021

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘சாம்பியன்’ படத்தில் அறிமுகமானவர் விஷ்வா. அப்படத்தில் கால்பந்து வீரராக நடிக்க கால்பந்து பயிற்சி எடுத்து நடித்தார்.

அடுத்து அவர் நடிக்க உள்ள புதிய படத்தில்  மீம்ஸ் கலைஞர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். 

அது பற்றி அவர் கூறியதாவது,

“சாம்பியன்” படத்தில்  என் நடிப்பைப் பார்த்து பிடித்து விட்டு KH பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஹரி பாஸ்கரன் சார் என்னைப் பாராட்டினார். அதன் பின், டைரக்டர் பாரதிபாலா கதையை சொல்லி அதற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி என்னை தேர்ந்தெடுத்தார். இப்படம் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் திரில்லர் படமாக இளைஞர்களைக் கவரும்படியாக இருக்கும்.

நான் அறிமுகமான முதல் படத்தில் கால்பந்து வீரராக பயிற்சி எடுத்தேன். இப்போது ‘மீம்’ கலைஞனாக பயிற்சி எடுத்து வருகிறேன். வினோத் என்கிற ‘மீம்’ கலைஞரோடு பயிற்சி எடுத்து வருகிறேன். அவரிடம் ‘மீம்’ பற்றிய நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன்,” என்றார்.

மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு நடைபெற்று வருகிறது.
 

Tags: suseendhiran, vishwa, champion

Share via:

Movies Released On March 15