கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் தனுஷ், ஐஸ்வர்ய லெட்சுமி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஜகமே தந்திரம்’.
இப்படத்தின் டீசர் இன்று யு டியூபில் வெளியானது. அதில் படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகிறது என்பதையும் அறிவித்துள்ளார்கள்.
190 நாடுகளில் உள்ள 204 மில்லியன் சந்தாதாரர்களை இப்படம் சென்றடையுமாம்.
தமிழில் மட்டுமல்லாது வேறு சில மொழிகளிலும் படம் வெளியாகும் எனத் தெரிகிறது. வெளியீட்டுத் தேதி எது என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.
இப்படத்தைத் தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என படத்தின் நாயகன் தனுஷ் ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதை ஏற்காத தயாரிப்பாளர் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்.
நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகும் முதல் பெரிய தமிழ்ப் படம் ‘ஜகமே தந்திரம்’ என்பது குறிப்பிடத்தக்கது.