‘டாக்சிக்’ டீசர், பிப்ரவரி 20 வெளியீடு
19 Feb 2026
'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' படத்தின் தயாரிப்பாளர்கள், படத்தின் டீசர் பிப்ரவரி 20, காலை 9.35 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கும் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
கியாரா அத்வானி, உணர்ச்சி சுமை கொண்ட கதாப்பாத்திரத்தில், நாடியாவாக நடித்துள்ளார். ஹூமா குரேஷி, அதிகாரமும் அபாயமும் கலந்த எலிசபெத் கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். நயன்தாரா, கங்காவாக அதிகாரமிக்க கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தாரா சுதாரியா, விரும்பத்தக்க மற்றும் புரிந்து கொள்ள முடியாத ரெபெக்காவாகவும், ருக்மிணி வசந்த் அதிகாரத்தை வெளிப்படுத்தும் மெலிசாவாகவும் நடித்துள்ளனர். இறுதியாக வெளியான கதாபாத்திர அறிமுகம் யாஷ். ராயாவாக, அவர் கூறும் “Daddy’s home…” என்ற வசனம், கதையில் அவரது வருகையையும், திரையரங்குகளுக்கு அவர் திரும்பி வருவதை அறிவிக்கும் ஒரு அறிவிப்பாகவும் அமைந்துள்ளது.
யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுத, கீது மோகன் தாஸ் இயக்கிய 'டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்' திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி- இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்- படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி - தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித்- ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி ( ஜான் விக்) (John Wick) - தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ்- கெச்சா காம்பக்டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட 'டாக்ஸிக்' திரைப்படம் - ஈத், உகாதி, குடி பட்வா, ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 19 , 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
