யோகிபாபு நடிக்கம் ‘கெணத்த காணோம்’
19 Feb 2026
‘ஒரு கிடாயின் கருணை மனு, சத்ய சோதனை’ ஆகிய படங்களை இயக்கிய மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கி முடித்த படத்திற்கு ‘கெணத்த காணோம்’ என தலைப்பு வைத்து அதன் முதல் பார்வையையும் வெளியிட்டுள்ளனர்.
யோகி பாபு கதையின் நாயகனாக நடிக்க, லவ்லின் சந்திரசேகர், ராமகிருஷ்ணன், ரேச்சல் ரபேக்கா, ஜார்ஜ் மரியம், மொட்டை ராஜேந்திரன், கவிதா பாரதி, கலைபாண்டியன், ஹலோ கந்தசாமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார், வி. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர். ராமர் படத்தொகுப்பை மேற்பார்வையிடுகிறார், பி.எல். சுபேந்தர் கலை இயக்கத்தை கவனிக்கிறார். சுதேஷ் சண்டை இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். பி. காத்தவராயன் மற்றும் டி.பி. சசி குமார் தயாரிப்பு நிர்வாகிகளாகவும், ஏ.ஆர். அமல்ராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். இந்தப் படத்தை ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது.
Tags: kenatha kanom, yogi babu
