யாஷுக்கு நாயகியாகும் கைரா அத்வானி

02 Apr 2024

‘டாக்சிக்’ படத்தில் யாஷுக்கு நாயகியாக கைரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘கே.ஜி.எஃப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு தனது அடுத்த படத்திற்காக பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் யாஷ். இறுதியாக கீது மோகன்தாஸ் சொன்ன கதை மிகவும் பிடித்துவிடவே அதில் நடிக்கவிருப்பதை உறுதி செய்தார்.

இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. தற்போது படக்குழுவினருடன் படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து வருகிறார் யாஷ். நடிப்பதோடு மட்டுமன்றி, படத்தின் கதை, நடிகர்கள் தேர்வு உள்ளிட்ட அனைத்திலுமே யாஷ் பங்கேற்றுள்ளார்.

இதில் யாஷுக்கு சகோதரியாக கரீனா கபூர் நடிக்கவுள்ளார். மேலும், நாயகியாக நடிக்க கைரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் 3 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இன்னொரு நாயகிக்கு பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

Tags: toxic, yash

Share via: