ஜெயம் ரவிக்கு பதில் அரவிந்த்சாமி

02 Apr 2024

’தக் லைஃப்’ படத்தில் ஜெயம் ரவிக்கு பதிலாக அரவிந்த்சாமி நடிக்க ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க தொடங்கப்பட்ட படம் ‘தக் லைஃப்’. முதற்கட்ட படப்பிடிப்பு மட்டுமே சென்னையில் திட்டமிட்டப்படி நடைபெற்றது. அதற்குப் பிறகு செர்ஃபியா படப்பிடிப்பில் கமல் கலந்துக் கொள்ளவில்லை. இதனால் ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர்களின் தேதிகள் குளறுபடி ஆனது.

‘தக் லைஃப்’ படத்தில் ஒப்பந்தமான துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவருமே விலகினார்கள். இதில் துல்கர் சல்மானுக்கு பதிலாக சிம்பு நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜெயம் ரவிக்கு பதிலாக அருண் விஜய், நிவின் பாலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகின.

ஆனால், உண்மையில் ஜெயம் ரவிக்கு பதிலாக அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. மணிரத்னம் படம் என்பதால் அவர் எந்தவொரு மறுப்புமே சொல்லவில்லை. விரைவில் சிம்பு மற்றும் அரவிந்த்சாமி ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார்கள்.

‘தக் லைஃப்’ படத்தின் படப்பிடிப்பு தேர்தல் பணிகள் அனைத்தும் முடிந்தவுடன் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

Tags: thug life, mani ratnam, kamal haasan, jayam ravi, arvind swamy

Share via: