சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜாம்பால்

02 Apr 2024

சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் வில்லனாக வித்யூத் ஜாம்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘துப்பாக்கி’. இந்தப் படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜாம்வால். அதற்குப் பிறகு ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்கு நண்பனாக நடித்திருந்தார். பின்பு எந்தவொரு தமிழ் படத்திலும் நடிக்காமல், முழுக்க இந்தி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் வித்யூத் ஜாம்வால்.

தற்போது மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறார் வித்யூத் ஜாம்வால். ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் இணைப்பில் உருவாகி வரும் படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.இதில் பிரம்மாண்ட சண்டைக் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் சிவகார்த்திகேயன் - வித்யூத் ஜாம்வால் மோதும் சண்டைக் காட்சி தான் படமாக்கப்பட்டு வருகிறது. இன்னும் இந்தப் படத்திற்கு பெயரிடப்படவில்லை. நாயகியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் படத்தினை முடித்துவிட்டு தான், சல்மான்கான் நடிக்கவுள்ள இந்திப் படத்தினை இயக்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்

Tags: sivakarthikeyan, ar murugadoss, vidyut jamal

Share via: