போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், அஜித்குமார் கதாநாயகனாக  ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு அக் கூட்டணி மீண்டும் இணைந்த அஜித்தின் 61வது படத்திற்கு ‘துணிவு’ என தலைப்பிட்டு, அப்படத்தின் முதல் பார்வையை நேற்று வெளியிட்டார்கள். இன்று இரண்டாவது பார்வையையும் வெளியிட்டுள்ளார்கள்.

மீண்டும் ஒரு சால்ட் பெப்பர் தோற்றத்தில் அஜித்தின் ‘துணிவு’ தோற்றம் அவரது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்று சொல்லுமளவிற்கு முதல் பார்வை போஸ்டரில் அவர் கையில் உள்ள ‘துப்பாக்கி’ ஒரு குறியீடாகவே தெரிகிறது. இன்று வெளியான இரண்டாவது போஸ்டரில் அஜித்தின் குளோஸ் அப் தோற்றம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்க, மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். படம் எப்போது வெளியாகும் என்று அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.