லைக்கா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இந்தியன் 2’.

இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு முன்னதாக நடைபெற்ற கிரேன் விபத்தின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு கொரானோ வந்ததால் மேலும் தடைபட்டது. பின்னர் தயாரிப்பு நிறுவனத்திற்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையில் எழுந்த பிரச்சினையால் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அனைத்து பிரச்சினைகளும் சுமூகமாகப் பேசி தீர்க்கப்பட்டது.

கடந்த வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் ஆரம்பமானது. இன்று முதல் அப்படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார்.

படப்பிடிப்புத் தளத்தில் இயக்குனர் ஷங்கருடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து “இந்தியன் 2 இன்று முதல்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘விக்ரம்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகி உள்ளதால் கமல் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.