’தக் லைஃப்’ கூட்டணியில் இணைந்த அசோக் செல்வன்

17 May 2024

’தக் லைஃப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அசோக் செல்வன்.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ’தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் நிறுவனம் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இதில் கமல், சிம்பு, கெளதம் கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட பலர் இணைந்து நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

கமல் மற்றும் சிம்பு இருவரும் நடிக்கும் சில முக்கிய காட்சிகளை படமாக்கிவிட்டு திரும்பியிருக்கிறது படக்குழு. விரைவில் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசோக் செல்வன். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைவில் சென்னையில் தொடங்கவுள்ள படப்பிடிப்பில் காட்சிப்படுத்தவுள்ளது படக்குழு. இதற்காகவே தனது உடலமைப்பை மாற்றியிருக்கிறார் அசோக் செல்வன்.

சமீபத்தில் இணையத்தில் வெளியான புகைப்படங்களை வைத்து, ‘சத்யா’ ரீமேக்கில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் பரவின. ஆனால், உண்மையில் அது ‘தக் லைஃப்’ படத்துக்கான கெட்டப். இதனை முடித்துவிட்டு தான் அடுத்த படத்தின் படப்பிடிப்பினை தொடங்க முடிவு செய்திருக்கிறார் அசோக் செல்வன்.

Tags: thug life, ashok selvan

Share via: