மீண்டும் ஷாரூக்கானுடன் இணையும் அனிருத்
17 May 2024
மீண்டும் ஷாரூக்கான் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கவுள்ளார் அனிருத்
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ஜவான்’. இதனை ஷாரூக்கான் நடித்து, தயாரித்திருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்தார். இதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை வெகுவாக பாராட்டப்பட்டது.
’ஜவான்’ படத்தின் மூலம் ஷாரூக்கான் – அனிருத் இருவரும் பெரும் நட்பு உருவானது. பல்வேறு மேடைகளில் அனிருத்தை புகழ்ந்து பேசியிருந்தார் ஷாரூக்கான். தற்போது மீண்டும் ஷாரூக்கான் படத்தில் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார் அனிருத்.
சுஜாய் கோஷ் இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கவுள்ள படம் ‘கிங்’. இந்தப் படத்தின் ஷாரூக்கானுடன் முதன் முறையாக அவருடைய மகள் சுஹானா கானும் இணைந்து நடிக்கவுள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளனர். த்ரில்லர் பாணியில் இந்தப் படத்தின் கதையினை உருவாக்கியுள்ளார் சுஜாய் கோஷ்.
Tags: anirudh. shah rukh khan