3 படங்களில் கவனம் செலுத்தி வரும் ஜெயம் ரவி

17 May 2024

ஒரே சமயத்தில் 3 படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி.

’சைரன்’ படத்தின் தோல்வியில் இருந்து மீண்டு வந்துள்ளார் ஜெயம் ரவி. அந்தப் படத்தினை மிகவும் எதிர்பார்த்தார். ஆனால், அது படுதோல்வியை தழுவியது. ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமம் விற்பனையை வைத்து நஷ்டம் இல்லாமல் பார்த்துக் கொண்டது படக்குழு.

தற்போது ராஜேஷ் இயக்கத்தில் ‘பிரதர்’, கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ‘காதலிக்க நேரமில்லை’ மற்றும் அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கத்தில் ‘ஜெனி’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜெயம் ரவி. அடுத்த 30 நாட்களில் இந்த மூன்று படத்தினையும் முடிக்க திட்டமிட்டுள்ளார்.

பிரதர்’ படத்தில் இன்னும் ஒரு நாள் படப்பிடிப்பு, ’காதலிக்க நேரமில்லை’ படத்தில் இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு, ‘ஜெனி’ படத்தில் ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு ஆகியவை பாக்கி இருக்கிறது. இவை அனைத்தையும் ஒரே மாதத்தில் முடித்துக் கொடுக்க திட்டமிட்டு இருக்கிறார் ஜெயம் ரவி.

பின்பு டப்பிங் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்டு, தனது அண்ணன் ராஜா இயக்கவுள்ள ‘தனி ஒருவன் 2’ படத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே வேறு எந்தவொரு படத்திலும் கவனம் செலுத்த வேண்டாம் எனவும் திட்டமிட்டு இருக்கிறார் ஜெயம் ரவி.

Tags: jayam ravi

Share via: