அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்க புதிய படமொன்று திட்டமிடப்பட்டுள்ளது.

17 May 2024

‘குற்றம் 23’, ‘தமிழ் ராக்கர்ஸ்’ மற்றும் ‘பார்டர்’ ஆகிய படங்களில் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. இதில் ‘குற்றம் 23’ திரைப்படம் வரவேற்பினை பெற்றது. ஆனால், இன்னும் ‘பார்டர்’ வெளியாகவில்லை. பல்வேறு பைனான்ஸ் சிக்கலால் வெளியிட முடியாமல் படக்குழு திணறி வருகிறது. இதில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப்சீரிஸ் சோனி லைவ் ஓடிடியில் வெளியானது.

இதனிடையே, மீண்டும் அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி இணைந்து பணிபுரிய முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தினை ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரிஸை தயாரித்த ஏவிஎம் நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது.

நீண்ட நாட்கள் கழித்து அறிவழகன் – அருண் விஜய் கூட்டணி படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்குகிறது ஏவிஎம் நிறுவனம். விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

தற்போது ஆதி நடித்துள்ள ‘சப்தம்’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் அறிவழகன்.

Tags: arun vijay

Share via: